Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2017

இது சாத்தியமா ? ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா ?


ஒரு முறைதான் உறவில் கர்ப்பமடைவது என்பது சாத்தியமா? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை  உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால்  கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ பல முறை  கடந்த பின்பே கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும்  சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம். பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே உண்மை.

85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு  பல காரணங்கள் உள்ளன.

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.