Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

சர்வதேச நீதிமன்றத்தை அணுக கத்தார் முடிவு: அரபு நாடுகளின் தடையால் பெரும் பொருளாதார இழப்பு !


அரபு நாடுகளின் தடையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சட்டப்படியான இழப்பீடு கோர கத்தார் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தடையின் காரணமாக அரசு நிறுவனமான கத்தார் ஏர்லைன்ஸ்க்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேறு பெரிய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் உள்ளிட்டோருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை ஈடுகட்ட சட்டவழிமுறைகளை பின்பற்றி தங்கள் மீது தடை விதித்துள்ள மற்ற அரபுநாடுகளிடம் இழப்பீடு கோரப்படும் என கத்தார் அரசின் தலைமை வழக்கறிஞர் தோஹாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கத்தார் தலைமை வழக்கறிஞரான அலி பின் பெதாயிஸ் மர்ரி, இழப்பீடு கோருவதற்காக சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இழப்பீடு தொடர்பான புகார்களை பெற்று அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இந்த கமிட்டி எடுக்கும் என்றார். உள்ளூர் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதி அமைப்புகளிடம் இதற்காக முறையிடப்படும் என்றார். சர்வதேச அளவில் அமலில் உள்ள சட்டங்களை பயன்படுத்தி 4 அரபு நாடுகள் மீதும் வழக்கு தொடர கத்தார் முடிவு செய்துள்ளது.

பொருளாதார இழப்பு மட்டுமின்றி தங்கள் நாட்டு மாணவர்கள், மற்ற அரபு நாடுகளில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள கத்தார், இதற்காக தனி வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறி சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ , எகிப்து ஆகிய நாடுகள் ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் கத்தார் நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தன. உறவை புதுப்பிக்க மேற்கண்ட நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் அரசு மறுத்துவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.