Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!


பொருளாதார மந்த நிலை மற்றும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலைமையற்றத் தன்மை காரணமாக வளைகுடா நாடுகளுக்கு பணிநிமித்தமாக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மொத்தம் 7 லட்சத்து 75 ஆயிரத்து 845 இந்தியர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். கடந்தாண்டு புள்ளிவிவரப்படி அந்நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 296 பேர் மட்டுமே. சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் குறைந்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் பொருளாதாரம் குறைந்து வருவதால்இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஈராக்-சிரியாவில் ஐ.எஸ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, அந்தப் பிராந்தியங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதும் அங்கு பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் அமெரிக்கா பின்பற்றும் உள்நாட்டு மக்களுக்கே வேலைவாய்ப்பில் அதிக பங்களிப்பு என்ற முறையை வளைகுடா நாடுகளும் கையில் எடுப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக சவுதி இந்த முறைக்கு மாறி வருவதும் சவுதிக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.