Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2017

பெட்ரோல் குண்டு வீசிய விஎச்பி யோகா மாஸ்டர் நாதாரி சரவணக்குமாரின் பின்னணி என்ன !


கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் வன்முறை பிரிவின் சரவணக்குமார் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த  சரவணக்குமார் ( வயது 31 ) இவர் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருக்கிறார். படித்து முடித்தவுடன் லண்டன் சென்று அங்கு பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு இந்தியா திரும்பியவர், ஆர்எஸ்எஸ், விஸ்வஇந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக இயங்கி வந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் ன் உட்பிரிவான விஸ்வஇந்து பரிஷத் அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வந்தவர். ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்களுடனான மோதலுக்கு தூபமிட்டு முன்னணியில் இருந்து வருபவர் ஆவார்.

குறிப்பாக ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களை விமர்சிப்பவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதுதான் இவர்களுக்கான பிரதான பணி. இந்த தாக்குதல் என்பது முதலில் விமர்சிப்பவர்கள் குறித்து தவறான அவதூறு தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவது. குறிப்பாக கடவுள் நம்பிக்கையுடையவர்களிடம்  கடவுளுக்கு எதிரிகள் என்றும், அவர்களை அழிப்பதுதான் கடவுளுக்கு செய்யும் காணிக்கை என்றும் வெறியூட்டுவது. அதன் பின்னர் யோக பயிற்சி என்ற பெயரில் வருபவர்களிடம் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல், முற்போக்காளர்களுக்கெதிராக விஷத்தை ஏற்றுவது இவர்களின் பிரதான பணியாக இருந்து வந்திருக்கிறது.

இந்த விஷ வித்துகளை விருட்சமாக்கும் வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவச யோக பயிற்சி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். பயிற்சியின் போது, யோகா பெயரில் வருபவர்களிடம் முற்போக்காளர்களுக்கு எதிரான கருத்துகளை திணித்ததுடன், மதவெறியூட்டவும் செய்திருக்கிறார். முற்போக்காளர்களை எதிர்கொள்ள எப்படியெல்லாம் வன்முறையை கையாளுவது என்ற பயிற்சியையும் யோகாவின் ஒருபகுதியாக அளித்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில், தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரின் மதவெறி வன்முறைகளை அரங்கேற்ற விடாமல் அவ்வப்போது சிபிஎம் மக்களிடம் அம்பலப்படுத்தி வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, அதனை பயன்படுத்தி கோவை மாநகரத்தை வன்முறை களமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் பஜ்ரங்தள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. அதனை சிபிஎம் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து முறியடித்தது.  மேலும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் சிபிஎம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தது. மேலும் சமீபத்தில் கோவை நகரம் முழுவதும் இலவச வீடு வாங்கித்தருவதாக பாஜகவினர் சாதாரண மக்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதையும் பொதுமக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. இதில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் குழுக்கள் கடுமையான ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில், சரவணக்குமார் தலைமையில் ஒரு குழுவினர் கோவையில் கூட்டம் நடத்தியிருக்கின்றனர். அதில் சிபிஎம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் குண்டு வீசுவது என முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம்  கோவை  இராமநாதபுரம் கொங்கு நகரில் உள்ள ஒரு விஎச்பி பிரமுகர் இல்லத்தில் நடந்திருக்கிறது. அதில் சரவணக்குமார் பங்கேற்று சில ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறார்.  அதன் பின்னர் வேறோரு இடத்தில் நடந்த இரண்டாம் கட்ட சதி திட்டத்தில் துல்லியமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவிப்பது என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது எப்போதும் அலுவலகத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள் அதற்காக பொருத்தமான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானித்திருக்கின்றனர். அதனடிப்படையில் மாவட்டக்குழு அலுவலகத்தில் எப்போது ஆட்கள் குறைவாக இருப்பார்கள் என கண்காணித்து வந்திருக்கின்றனர். அதில் அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில், அக்குழுவை சேர்ந்த ஒருவர் அதிகாலையில் அலுவலகம் வழியாக சென்று  அலுவலகத்தின் வெளியில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்திருக்கிறார். அந்த தகவலை பெட்ரோல் குண்டுடன், நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த சரவணக்குமார் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இருவர் மட்டும் நம்பர் பிளேட் இல்லாத டூவீலரில் முகத்தில் கர்சீப்பை ( கைக்குட்டை) கட்டிக்கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் டீசல் டேங்க்கை குறிவைத்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

ஆனால் சரவணக்குமார் திட்டத்தின் படி பெட்ரோல் குண்டு வெடித்து எரிவதில், டீசல் டேங்க்கும் வெடித்து சிதறி மிகப்பெரிய சேதாரம் ஏற்படும். மேலும் அலுவலகத்தில் உள்ள நபர்களும் உயிரிழப்பார்கள் என எண்ணியிருக்கின்றனர். ஆனால் பெட்ரோல் குண்டை எறிந்ததில் குறி தவறி காரின் கதவு ஓரம் பட்டு கீழே விழுந்து வெடித்து எரிந்திருக்கிறது. இதில் காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல் சேதமடைந்தன.

இதையடுத்து விரைந்து வந்த கோவை காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்த கடைகளில் சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி விசாரணைக்கு கொண்டு சென்றனர். கொண்டு சென்ற சிறிது நேரத்தில், கோவையில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு காவல்துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து, கைப்பற்றிய சிசிடிவி பதிவுகளை வைத்து, தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் இருந்து முன்னதாக அப்பகுதியில் சென்ற வாகனங்களை மிக நுட்பமாக ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு, நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் சென்றது காவல்துறையினருக்கு  சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் அந்த வாகனம் தாக்குதல் நடத்திய பின்னர் எங்கு சென்றது என்ற ஆய்வில் ஈடுபடத்துவங்கினர்.  அதற்கு அந்த வாகனம் சென்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட  சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டன. அதில் கோவையில் இருந்து தாக்குதல் நடத்தி விட்டு மேட்டுப்பாளையம் சென்றது சிசிடிவி பதிவில் அடிப்படையில்  உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த வாகனம் எங்கெங்கு செல்கிறது, எப்படி செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டது. அதில் ஜூன் 20ம் தேதி இரவு வாகனத்தில் மீண்டும் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு  பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த எண்ணை அடிப்படையாக கொண்டு வட்டார போக்குவரத்து துறையில் விசாரணை நடத்தி  தகவல்களை சேகரித்தனர்.

அதன் பின்னர் அனைத்து ஆவணங்களையும் ஒப்பிட்டு, சிசிடிவியின் பதிவில் உள்ளபடி வாகனத்தை இயக்கியவர், பெட்ரோல் குண்டு வீசியவர் இவர்கள்தான் என்பதையும் உறுதிசெய்தனர். அதன் பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று இரவு பெட்ரோல் குண்டு வீசிய குழுவை சேர்ந்த சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, பிரிவு 435 கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கோவையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில்  பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீச்சு சம்பவங்களிலும் இந்த ஆர்எஸ்எஸ் வன்முறை  கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்த புலன் விசாரணையும் ஒருபுறம் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.