Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

விபத்து பற்றி கவிதை எழுதிய அழகுப் பெண் :ஆனால் எழுதிய அன்றே…! ஓ…இறைவா..


அந்த பெண் அழகான கல்லூரி மாணவி.. கலோரியில் பேச்சு,நாடகம், கவிதை, நாடகம், நடனம் என்று அத்தனையிலும் படு சுட்டி..!
விபத்து பற்றி கண்ணீர் கவிதை எழுதியவர். அவருக்கு நடந்த சோகம் இந்த உலகில் யாருக்கும் வரவே கூடாது..
அந்த மாணவியின் மரணம் கூட விபத்தில் தானா நடக்க வேண்டும்..!?
நண்பர்களே கவிதை படியுங்கள்…பகிருங்கள்…!

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று..
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று..
கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,…..
விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை……
ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்…..
காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை
விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை…,..
அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று……
அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!
தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!
விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளை எல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,….?
அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்!
நீங்கள் ஒரு மகனாக இருந்தால்
ஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு!
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!
தந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே
இருண்டு போச்சு!
கண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா!
கவனமாக செல் !
காத்திருக்கின்றன உறவுகள் உனக்காக!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.