Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2017

அண்ணன் எதிரில் தங்கைக்கு நேர்ந்த கொடுமை


திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண் ஒருவரை அவரது தாய்மாமனே கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (24), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

தனலட்சுமியை தினமும் அவர் அண்ணன் முத்துக்குமார் பைக்கில் பள்ளிக்கு கொண்டு விடுவது வழக்கமாகும்.

அதன்படி நேற்று காலை இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, முத்துக்குமார் பைக்கை வழிமறித்துள்ளது.

காரில் நான்கு பேர் இருந்த நிலையில், மூன்று பேர் மட்டும் கீழே இறங்கினார்கள், அதில் ஒருவர் தான் வைத்திருந்த மிளகுப்பொடியை முத்துக்குமார் முகத்தில் வீசியுள்ளார்.

பின்னர் மூவரும் சேர்ந்து தனலட்சுமியை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து முத்துக்குமார் பொலிசில் புகார் அளிக்க தனலட்சுமியை, அவர் தாய் மாமன் கஜேந்திரன் (30) தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியது தெரியவந்தது.

அதாவது, தனலட்சுமிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கும் இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனலட்சுமியின் தாய் மாமன் அவரை திருமணம் செய்ய பெண் கேட்ட நிலையில், தனலட்சுமி குடும்பம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து தனலட்சுமியை கஜேந்திரன் கடத்தியுள்ளதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கஜேந்திரன் செல்போன் சிக்னலை வைத்து அவர் திருவாரூரில் இருப்பதை அறிந்த பொலிசார் அவர் காரை மடக்கி பிடித்தனர்.

காரில் இருந்த தனலட்சுமி மீட்கப்பட்ட நிலையில், துவாரகன்(21) அரவிந்த்(24) முகமது நசீர்(33) ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற கஜேந்திரனையும் பின்னர் பொலிசார் கைது செய்தார்கள்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் கஜேந்திரன் உள்பட 4 பேரையும் சிறையில் அடைத்தார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.