Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2017

கல்விக்கடன் பெற்றவர்கள் கழுத்தை நெறிக்கும் இந்திய வங்கிகள்: கதறி அழுத ஒரு தாய்:


நமது தேசம் எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு விஷயம் சான்றாக இருக்கிறது. சென்னையின் ஒரு ஏரியாவில் ஒரு இந்தியன் வங்கி  கிளை வாசலில்  ஒருவர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

அவளின் கணவர் இறந்து  ஆறுவருடங்கள் ஆகியது. பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும் என்கிற வைராக்கியத்தில் அந்தத் தாய்.


எங்கெங்கோ அலைந்து சிபாரிசுகளைப் பிடித்து ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்த தனது மகனுக்கு இந்தியன் வங்கியில் கல்விகடன் வாங்கி இருந்தார்.

நன்றாகப் படித்த அந்த தாயின் மகன் இன்னும் வேளைக்கு போகவில்லை.

பல இடங்களில் இன்டர்வியூ அட்டன் பண்ணிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்  அவரின் வீட்டிற்கு திடீரென்று  வங்கி ஆட்கள் போய்நின்றார்கள்.

வரும்போது இவ்வளவு தொகை கொண்டு வர வேண்டும் என்று கறார் உத்தரவு போட்டார்கள். திடுக்கிட்டு போனார் அந்த தாய்.

அவர்கள் சொன்ன தொகைக்கு என்ன செய்வது என்று கலங்கிப் போனார். உறவினர்கள் வீடுகளில் கையேந்தினார். எங்கும் கிடைக்கவில்லை.

குறிப்பிட்ட தேதியில் வங்கி மீண்டும் மிரட்டி அழைத்தது. பயந்து நடுங்கியபடி வங்கிக்கு சென்றார் அந்த தாய். அவரைப் போலவே நிறைய பெற்றவர்கள் கலங்கிய நிலையில் நின்றார்கள்.

திடீரென்று அவகாசமே கொடுக்காமல் அழைத்து, ரிசர்வ் வங்கி பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள்.

வட்டி வேண்டாம் வாங்கிய  தொகையில், மாதம் இவ்வளவு கட்டியே  ஆகவேண்டும். அப்போதுதான் சலுகை என்கிறார்கள். படித்த பிள்ளைகளுக்கு இன்னும் வேலையே கிடைக்க வில்லை.

நாங்கள் மல்லையா போல ஓடிப் போகப் போவதில்லை. நாங்கள், எங்கள் பிள்ளைகள் இங்கு தான் வாழ்ந்து ஆகவேண்டும் லண்டனில் எங்களுக்கு யாரும் தெரியாது.

அப்படியே தெரிந்தாலும் லண்டனில் போய் ஒளிந்து கொள்ள எங்களுக்கு வசதி இல்லை என்கிறார்கள் கதறிய படி..!

அவர்களில் ஒரு தாய் சொன்னார். “அவசரத்திற்கு வங்கி கடன் கொடுத்து எங்கள் பிள்ளைகள் படிக்கச் உதவியது வங்கி அதை நாங்கள் மறக்கவே மாட்டோம். வாங்கிய கடனில் வட்டியில் பெரும் பகுதியை கட்ட வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இவ்வளவு குறுகிய  அவகாசம் கொடுக்காமல் இன்னும் கொஞ்சம் அதிகம் டைம் கொடுத்திருக்கலாம் என்கிறார்.

வாங்கியக் கடனை கொடுத்தே ஆகவேண்டும். அதற்கு  மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் ஏழைப்  பெற்றோர்கள்  நிலையைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாமே..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.