Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2017

தாலி கட்டினால் திருமணம் செல்லாது.! இதுவெல்லாம் செய்ய வேண்டுமாம்!


அண்மையில் வேலூர் மாவட்டம் திருப்த்தூரில் அண்ணனின் எதிர்கால மனைவிக்கு, மண மேடையிலேயே தம்பி தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த தாலியை கழற்றி வீசிவிட்டு, அந்த பெண்ணை கூட்டிச் சென்றனர்.
இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது என சட்ட நிபுணர்களிடம் விசாரித்தோம்.
இதுபற்றி தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், இந்து திருமணச் சட்டத்தின்படி, மணமகன் மற்றும் மணமகள் இருவரும் சம்மதித்து தாலி கட்டினால் மட்டுமே சட்டப்படி திருமணம் செல்லும் என தெரிவித்துள்ளார்.
கட்டாயத்தின் பேரில் ஒரு பெண்ணின் கழுத்தில் ஒருவர் தாலி கட்டிவிட்டால், அதனை இந்து திருமணச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இந்து திருமணத்தில் தாலி கட்டாயம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.