Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

பெற்ற மகனை கொடூரமாக கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்


கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மகனை தன் கணவருடன் சேர்ந்து கொலை செய்த தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறசாலை கொடவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் மனைவி சரஸ்வதி.
இவர்களுக்கு சந்தோஷ் (22) மற்றும் சஜின் (21) என இரு மகன்கள் உள்ளனர்.
சந்தோஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து ரகசியமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தோஷ் அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் தம்பியுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மூவரையும் சந்தோஷ் கத்தியால் வெட்ட முயல, அதிலிருந்து தப்பிக்க அவர்கள் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.
இதனையடுத்து விட்டில் தனியாக இருந்த சந்தோஷ், மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சந்தோஷின் சகோதரர் சஜின், தாயார் சரஸ்வதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சரஸ்வதி தனது கணவருடன் சேர்ந்து மகனை கொன்றதை ஒப்பு கொண்டதுடன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், போதை பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ் பெற்றோர், தம்பி என்பதை மறந்து கண்மூடித்தனமாக எங்களை அடித்து உதைத்தான்.
அவனை திருத்த பல முறை முயற்சித்தும் அது முடியாததால் அவன் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் எங்களை சந்தோஷ் கொன்று விடுவான் என நினைத்தோம். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல நானும், என் கணவரும் முடிவு செய்தோம்.
ஏற்கனவே அவனை கொல்ல மூன்று முறை நாங்கள் முயற்சித்த நிலையில், சம்பவத்தன்று போதையில் தூங்கி கொண்டிருந்த என் மகனின் கால்களை துணியால் கட்டி அவன் முகத்தில் ஆசிட் வீசினோம்.
பின்னர் கத்தியால் பின்பக்க தலையில் வெட்டி கொன்றோம் என சரஸ்வதி வாக்குமூலம் அளித்துள்ளார்
இந்த கொலை தொடர்பாக ஸ்ரீதரனை பொலிசார் தற்போது வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.