Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் ரயில்வே போலீஸ் சுக்லா


ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே போலீஸ் ஒருவன்  கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் யோகி ஆதித்யநாத்  ஆளும்  உத்திர பிரதேசம் மாநிலத்தின்   மீரட் பகுதியை சேர்ந்த 27 வயது இஸ்லாமிய  பெண் ஒருவர், சிகிச்சைக்காக லக்னோ சென்றார். அங்கு சிகிச்சைக்கு பின் ஊர் திரும்பு உள்ளார். அவர் சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் பயணம் செய்து உள்ளார். அவர் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளார்.

அவரை விசாரித்த டிடிஆர், அப்பெண்ணை ஊனமுற்றோர் பெட்டிக்கு அனுப்பியுள்ளார். அந்த பெட்டியில் தனியாக இருந்த  ரயில்வே போலீஸ் சுக்லா என்பவன்   அந்த ரயில் பெட்டியின் கதவுகள் அனைத்தையும் மூடி அப்பெண்ணை கட்டிவைத்து சித்ரவதை செய்து கற்பழித்துள்ளார்.

பிஜ்னூர்  ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது பயணிகள் சிலர் ஊனமுற்றோர் பெட்டியில் ஏற  கதவை  திறக்க முடியாமல் திணறினர். பின்னர்  கதவை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர்.

அங்கு  பெண் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு  உள்ளதை கண்ட  மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்., பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மக்கள்  விசாரித்து உண்மையை அறிந்துள்ளனர். பின்னர், குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்துள்ளனர். இதனையடுத்து, சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது  பின்னர் விடுவிக்க படுவான்

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தலித்  இஸ்லாமிய தாக்குதல்கள்  தொடர்ந்தவண்ணமே உள்ளது  எனப்து  குறிப்பிடத்தக்கது
இந்த கொடூர சம்பவத்தை  ஆளும்  பாஜக  கண்டு கொள்ளவே இல்லை
என்பது மிகவும் வேதனை அளிக்கிறது

விசாரணை என்பது ஒரு கண் துடைப்பாக மட்டுமே இருக்கும்
சிலகாலங்களில் இந்த சம்பவத்தை  மக்கள் மறந்து போவார்கள்... மறக்கடிக்க படுவார்கள் .......

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.