Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2017

நெடுவாசலே நெருங்க விடாதே..! நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த நிலை வர வேண்டுமா..??


தமிழகம் அழிவடையாமல் பாதுகாப்பதற்காக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகம் பாதிப்படையும் என உணர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இப் போராட்டத்தை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
கண்டனம் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதென தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது.
மீதேன் வகை எரிவாயுக்கள், எண்ணெய் ஆகியவற்றின் கூட்டுக்கலவையைத்தான் ஹைட்ரோ கார்பன் என்பார்கள்.
பூமியின் கீழே சுமார் பத்தாயிரம் அடி ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கிடக்கும் வாயுவை வெளியே எடுத்து பெட்றோலியப் பொருட்களையும் எரிவாயுவையும் தனித்தனியாகப் பிரித்து எடுப்பார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஆபத்தில்லாத வேலை போன்று தான் தோற்றமளிக்கும். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மிக ஆபத்தானவை.
உலகின் பல நாடுகள் இதற்குத் தடை விதித்துள்ளன. நெடுவாசலில் 2500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டொரு இடங்களில் துளையிடுவர்கள் நிலத்தடி நீர், சுண்ணாம்புக்கல், பாறை ஆகியவற்றை ஊடுருவி ஹைட்ரோகார்பன் பகுதியைச்சென்றடையும்.
அங்கிருந்து பக்கவாட்டில் செல்லும் குழாய்கள் எரிவாயுவை வெளியே இழுத்துவரும். இந்தச் செயற்பாட்டின்போது போது நிலத்தடி நீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும்.
அதனைச்செய்வதற்கு இரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். அக்கலவைகளால் புற்றுநோய், சுவாசக்கோளாறு, சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும். நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாய நிலம் பாலைவனமாகும்.
நிலத்தடியின் உறங்கிக்கிடக்கும் எரிவாயுவை வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு கோடி லீட்டர் தண்ணீர் தேவைப்படும்.
எரிவாயுவைப் பிரித்தெடுக்க கழிவுகளை அகற்றும் நடைமுறையை மிகப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். சயனைட் வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டதில் இருந்து இந்தியா இன்னமும் மீளவில்லை.
நெடுவாசலில் பிரித்தெடுக்கப்படும் எரிவாயு குழாய் மூலம் 80 கி.மீ தூரத்தில் உள்ள கோவிக்கலப்பை என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படும்.
20 வருடங்களுக்கு எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கிடைக்கும் அளவைப் பொறுத்து மேலும் 10 வருடங்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் நீடிக்கப்படலாம்.
இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு நாள் பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பிய சேதுபதி என்ற மாணவர்  ஹைட்ரோகார்பன் கழிவில் தவறி விழுந்ததாகவும் அதனால சேதுபதி உடம்பு முழுவதும் ஆசிட் அடிச்ச மாதிரி எறிந்து போனதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்லி இருக்காங்க..
இப்படி பட்ட ஆபத்தான கழிவ இன்னும் ஏன் சுத்தம் செய்யாம வச்சிருக்காங்க???
இதனால் அதன் அருகில் உள்ள விவசாய நிலங்களும் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.