Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2017

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!


இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களுக்கே தெரியாத, மறக்கடிக்கப்பட்ட உண்மை, இவ்வுலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் தான் என்பது.

நமது பழம்பெரும் இலக்கியங்களில் ஆங்காகே, அவ்வப்போது வந்து செல்லும் ஒரு வார்த்தை "குமரி". இது வெறும் இளம் மங்கையரை மட்டும் குறிக்கும் சொல்லல்ல. நாம் வாழ்ந்த, பிறந்த மண்ணைக் குறிக்கும் சொல்.

இன்று உலக அகழ்வாராய்ச்சியாளர்களால் "லெமுரியா" (Lemuria) என்றழைக்கப்படும் கண்டம் தான் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்புக் குமரிக் கண்டம் என்ற பெயருடன் மிக கம்பீரமாய் இருந்தது.
முச்சங்கம் வளர்ந்த இடமும் அதுதான், தமிழிசைப் பாக்களும், இயல், இசை, நாடகமும் என நாகரீகம், கலைகள், வீரம் அனைத்தும் விளைந்த இடம், குமரிக் கண்டம். தமிழ் வெறும் மொழி அல்ல பெரும் வரலாறு,

மனித இனத்தின் தோற்றம்
ஏறத்தாழ இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் அழிந்ததாகக் கூறப்படும் கண்டம், குமரிக் கண்டம். இங்கு தான் பல உயிரினங்கள் தோன்றின. ஆதி மனிதர்களும் தோன்றிய இடமும் இது தான்.

நாகரீக வளர்ச்சி
மனிதன் இவ்வாறு தான் இருக்க வேண்டும், குடும்பத்திற்கு என்று ஓர் இலக்கணம், உறவுகள், பந்தம், பாசம் என நாகரீக வளர்ச்சிக் கண்டெடுக்கப்பட்ட இடமும் குமரிக் கண்டம் தான்.

 மொழியின் பிறப்பு
அனைத்து மிருகங்களைப் போல வினோத ஓசைகளை எழுப்பியவாறுத் திரிந்துக் கொண்டிருந்த சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் மொழிப் பிறந்த இடம் தான் குமரிக் கண்டம்.

 தமிழ் மொழியின் பிறப்பு
ஆதி மனிதன், தான் தோன்றிய இடமான குமரி கண்டத்தில் பேசிய மொழி "தமிழ்". உலகிலேயே பழமையான மொழி மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த மொழியும் தமிழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


முச்சங்கம்
முச்சங்கம் வளர்க்கப்பட்ட இடம் தேனிக்கு அருகாமையில் இருக்கும் மதுரை அல்ல. குமரிக் கண்டத்தின் மிக முக்கியமான தலைநகராக திகழ்ந்துக் கொண்டிருந்த மாபெரும் நகர் "மதுரை". அந்த மதுரை மாநகரத்தில் தான் தமிழ் முச்சங்கம் வளர்த்து வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 கண்டங்களை இணைத்த கண்டம்
இடது பக்கம் ஆப்ரிக்கா, மற்றும் வலது புறம் ஆஸ்திரேலியா, மேல்புறம் ஆசிய போன்ற கண்டங்களை இணைத்து வைத்திருந்த கண்டம் தான் குமரிக் கண்டம்.

 பிரம்மாண்டம்
எவரெஸ்ட் சிகரம் எல்லாம், குமரிக் கண்டத்தில் இருந்த மலைகளுக்கு முன் வெறும் குன்று தான் எனவும். எவரெஸ்ட் போல பத்து மடங்கு பெரிய மலைகள், வானுயர் அருவிகள், ஆறுகள் என கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு இருந்த கண்டம் குமரிக் கண்டம்.


உயர் தொழில்நுட்பங்கள்
கட்டிடம், மருத்துவம், புவியியல், வானியல் என்று பல துறைகளிலும் உயர் தொழில்நுட்பத்தை அப்போது குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் கையாண்டுள்ளனர்.

 பேரழிவு
அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிவுகளினால் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம்.

 விரிவடைந்த மனித இனம்
பேரழிவுகளுக்கு பின் மூன்று திசைகளிலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது.


ஆராய்ச்சிகள்
கடந்த பத்து வருடங்களாக பல ஆய்வுகள் குமரிக் கண்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ஆய்வறிக்கைகள், மூழ்கிய நிலையில் உள்ள கட்டிடங்களில் வடிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் தமிழோடு ஒத்துப்போவதாக ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.








No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.