Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2017

ஸ்டேட் பாங்க் அதிகாரியாக ஆசையா? ... உடனே விண்ணப்பியுங்கள்..!


ஸ்டேட் வங்கியில் 554 அதிகாரி பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அதிகமான கிளைகளுடன் பரந்த வங்கிச் சேவையை வழங்கி வரும இந்த வங்கியில் தற்போது சிறப்பு நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி
சி.ஏ, .ஐ.சி.டபுள்யு.ஏ, ஏ.சி.எஸ், எம்.பி.ஏ போன்ற பிரிவு படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டு உள்ளது.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31.03.2017ந் தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 3 பணிகளுக்கும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 2 பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும், உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்ததாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 18 .05. 2017ந் தேதி

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.