Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2017

உலகம் முழுவதும் இளம் பருவத்தினர் அதிக உயிரிழப்பிற்கு சாலை விபத்துகளே காரணம் உலக சுகாதார அமைப்பு


உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர் உயிரிழப்பதற்கு சாலை விபத்துகளே முதல் காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் காஸ்டெல்லோ கூறியதாவது:-

கடந்த 2015-ல் மட்டும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 11 லட்சம் பேர் (தினமும் சுமார் 3,000 பேர்) சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 72,655 பேர் மூச்சு திணறல் நோய்களாலும், 67,149 பேர் தற்கொலை செய்து கொண்டும், 63,575 பேர் வயிறு சம்பந்தமான நோய்களாலும், 57,125 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ், மூச்சு திணறல், வயிற்று உபாதை ஆகியவை தான் இளம் வயதினரை அதிக அளவில் பலி கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகம் தான் வயது வந்த இளம்பருவத்தினரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று  தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.