Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 8, 2017

தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள்


தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசியரியர் பணிகள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஏற் படும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. தற்போது பி.டி. அசிஸ்டண்ட் பணிக்கு 912 இடங்கள் மற்றும் பி.டி. அசிஸ்டண்ட் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) பணிக்கு 202 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1,114 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பி.ஏ., பி.லிட் பட்டப்படிப்புடன், பி.டி./பி.எட் படித்தவர்கள், டி.டி.எட்.- டி.பி.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் இன்னும் பிற பாடங்களில் பி.எட். படித்தவர்களுக்கும் வாய்ப்புள்ளது. எந்தெந்த பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

2012, 2013, 2014-ம் ஆண்டுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் Teacher Recruitment Board (TRB), 4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு 10-5-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.