Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2017

விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை கிண்டலடித்த கேடி ராகவன்... சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்


டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டத்தை பாஜகவைச் சேர்ந்த கேடி ராகவன் பேஸ்புக் பக்கத்தில் கிண்டலடித்து பதிவிட்டார்.

பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 29 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.

இதனை கிண்டலடிக்கும் வகையில் " எங்கே போகிறோம்...? தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்கவந்தால் ஆடையை அவிழ்த்து காட்டி சவால்....... கடனை திருப்பி கேட்டால், அதற்க்கும் சாலையில் ஆடையை அவிழ்த்து சவால்... #50ஆண்டுகழகஆட்சிகளின்சாதனைகள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. அது தொடர்பான சில பேஸ்புக் பதிவுகள்:



சட்டமன்றத்தில் சாமியார்
நிர்வாணமாக போராடுவது தவறு - கே டி ராகவன் சொல்றான்.
நிர்வாண சாமியாரைச் சட்டமன்றத்தில் உரையாற்ற விடுவது மட்டும் சரியா கேடி?


பரம்பரைக்கு தகுதியில்லை
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன் நிர்வாணம் குறித்துப் பேச, உங்கப் பரம்பரைக்கே தகுதியில்லை ராகவா!




முதலாளிகிட்ட சொல்லு
தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடுவது தவறு - கே.டி.ராகவன்
அத உன்னோட முதலாளி கிட்ட சொல்லுய்யா ... ...


வார்ப்பு அப்படி
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன்
ராகவன் ஜி உங்களைப்போன்ற ஆன்டைகளுக்கு ஆன்களின
நிர்வான வாழ்வாதார போராட்டம் தவறாகத்தான் தெரியும் ஏன்ன உங்க வளர்ப்பு&வார்ப்பு அப்படி...!


அகோரி போல நிர்வாணமா?
நிர்வாணமாக போராடுவது தவறு -
கே டி ராகவன்.......
நிர்வாணமா போராடுறது தான் உங்களுக்கு பிரச்சனையா?......
அகோரி போல நிர்வாணமா அலைஞ்சா காலில் விழுந்து கும்பிட மோடி ஓடோடி வந்திருப்பார் இல்ல.......



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.