Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2017

துபாயில் திருக்குறளிசை 'சி.டி.' வெளியீட்டு விழாவில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு 'இளம்புயல்' பட்டம்


 துபாய்: துபாயில் ரிதம் ஈவென்ட்ஸ் திருக்குறளிசை குறுந்தகடு வெளியீட்டு விழாவை நடத்தியது.

இசையமைப்பாளர் பரத்வாஜ் இயக்கத்தில் உருவான திருக்குறளிசை குறுந்தகட்டை பரத்வாஜ், துபாய் எஸ்.எஸ். மீரான், ரிதம் ஈவென்ட்ஸ் சபேசன் மற்றும் சந்திரா ரவி முன்னிலையில் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இயக்குநரும், ஈஸா அல்குரைர் குழும நிறுவனங்களின் சேர்மனுமான ஈஸா அல்குரைர் வெளியிட, திமுக இளைஞரணி துணைச் செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

தொகுதி பக்கமே தலை காட்டாது இருக்கும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழகத்தில், தன் தொகுதியில் சாலை வேண்டும் என்பதற்காக டெல்லிக்கே சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து, தன் தொகுதி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வரும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அரசியலில் இன்னும் பல ஏற்றங்கள் காண வேண்டும் என அமீரகத் தமிழர்கள் அமைப்பு சிம்மபாரதி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்

ஈஸா அல்குரைர் சிறப்புரையில், இங்கு மேடையில் பேசிய அனைவரின் பேச்சுகள் மூலம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த இளம் வயதில் ஒரு மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக சேவை ஆற்றிவருவதை தான் அறிந்து கொண்டதாகவும், மகேஷ் அவர்கள் மென்மேலும் சிறப்புற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாக பாராட்டி பேசினார்
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, துபாய் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு "இளம் புயல்" பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டத்தை திரு . ஈஸா அல்குரைர் வழங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார்.

பட்டத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அந்த பொய்யா மொழிப் புலவர் இயற்றிய உலகப் பொதுமறையின் இசைத்தகடு வெளியீட்டு விழாவில், இந்த பொய்யாமொழியின் புதல்வனாகிய தமக்கு இவ்விருது வழங்கப்படுவது தமக்கு பெருமையளிப்பதாகக் கூறினார்.

மேலும் இவ்விழாவில் துபாய் தமிழ் எஃப்.எம். துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாமாண்டு துவங்குவதை முன்னிட்டு, ஈஸா அல் குரைரும், அன்பில் மகேஷ் பொய்யா மொழியும், தமிழ் எஃப்.எம். அதிபர் ராம் முன்னிலையில் அதை கேக் வெட்டி துவக்கி வைத்தனர்
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர், ஶ்ரீகாந்த் தேவா, ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீத் யாஸீன், யுஏஇ தமிழ்ச் சங்கம் ரமேஷ் விசுவநாதன், அமீரகத் தமிழ் மன்ற தலைவர் ஆஸிஃப் மீரான் மற்றும் நஜ்முத்தீன் காக்கா, தமிழ்நாடு கல்சுரல் அசோசியேஷன் தலைவர் அஷ்ரஃப் அலி, முத்தமிழ் சங்க தலைவர் மோகன் பிள்ளை, அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவர் அமுதரசன் மற்றும் சிம்ம பாரதி,

தமிழ்த்தேர் பொதுச் செயலாளர் ஜியாவுதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான், துபாய் லேடீஸ் அசோசியேஷன் மீனா குமாரி பத்மநாபன், சமூக சேவைகள் ஜெஸிலா பானு, கவிஞர் ஃபாத்திமா ஹமீத், ரமாமலர், அபிவிருத்திஸ்வரம் ஜாகிர் ஹுசைன், திரிகூடபுரம் முஸ்தஃபா, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவர் பாலா உள்ளிட்ட துபாய் வாழ் அனைத்து தமிழர் அமைப்பினர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.