Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு 'லிப் டூ லிப்' வாழைப்பழம் தரும் சாமியார்...!!


குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார்.

திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர்.


ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது..

லிப் டூ லிப் டிரான்ஸ்பர்
கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இருக்கிறாராம். இதற்காக அவரை நாடிச்செல்லும் பக்தர்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார்.

எப்படி என்று கேட்கிறீர்களா? வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள். அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். இந்த சேவைக்கு! பெயர் கவாள சேவையாம்.

அர்ஜூன் மனிஷா கொய்ராலா
முதல்வன் படத்தில் உப்புக்கருவாடு பாட்டில் ஒரு சீன் வரும்... வெத்தலையை நன்றாக மென்று தின்னும் மனீஷா கொய்ராலா அதை அர்ஜூன் வாயில் டிரான்ஸ்பர் செய்வார். அப்படித்தான் வாழைப்பழத்தை ஊட்டுகிறார் சாமியார்.

ஆண்களுக்கு எலுமிச்சை
இந்த லிப் டூ லிப் வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தானாம். அப்போ ஆண்களுக்கு என்ன என்று கேட்கிறீர்களா? எலுமிச்சை கனியை வாயில் வைத்து துப்புவார் சாமி. அதை பிள்ளை இல்லாத ஆண்கள் துண்டை வைத்து கேட்ச் பிடிக்க வேண்டும். (இது எப்டி!)





No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.