Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

சின்னம்மாவா? சின்ன அம்மாவா?- சசிகலா முதல்வர் ஆனால்!


அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சர் ஆவார் என இப்போதே பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவர் முதலமைச்சரானால், ஊருக்குள் என்னென்ன நடக்கும்னு சும்மா ஒரு கற்பனை. கற்பனை மட்டும்தான் பாஸ். ஏன்னா இதைவிட பெருசாகக்கூட ரியல்ல நடக்கலாம் ஆங்க்...

சசிகலா முதலமைச்சர் ஆனதுமே, பாரதப் பிரதமர்கிட்ட ஒரு மேட்டரை சொல்றதா இருந்தாலும் சரி! பஞ்சாயத்து போர்டு  பிரசிடென்ட் கிட்ட ஒரு மேட்டரை சொல்லுறதா இருந்தாலும் சரி! கடிதம் எழுதும் முறையானது முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நேராக அவரவர்களின் வீட்டுக்கே சென்று 'வலியுறுத்தும்' முறை அமலுக்கு கொண்டு வரப்படும்.

தன்  முதல் மேடைப்பேச்சிலேயே இந்தியத் துணைக்கண்டத்தையே வியக்கவைத்த மாபெரும் பேச்சாற்றலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, சசிகலாவிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அ.தி.மு.க. தொண்டர்களால் கோரிக்கை வைக்கப்படும். அதில் ஒரு குழு கிராமி விருதுக்கும் சசிகலாவின் பெயரைப் பரிந்துரைத்து 'கிலி' ஏற்படுத்தும்.

வாய் திறந்து பேசாமலேயே பல சாதனைகளைப் புரிந்த மிஸ்டர் பீன், சார்லி சாப்ளின் ஆகியோரின் புகழ்கள் ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் தவறாது நினைகூறப்பட்டு பாராட்டப்படும். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க கழகத்தினர் சார்பாக தினசரி பாடம் எடுக்க வழிவகைகளும் செய்யப்படும்.

ஜெயா டிவியில் 'இன்னோவா' நாஞ்சில் சம்பத் தலைமையில் 'சின்னம்மாவா? சின்ன அம்மாவா? எப்படி அழைக்கவேண்டும் கழகம்' என்கிற டாபிக்கில் தீவிர பண்டைத்தமிழ் இலக்கிய பட்டிமன்றமும் நடத்தப்படும்.

பொதுச்செயலாளராக நியமிச்சாச்சு. முதலமைச்சராகவும் ஆயாச்சுனா தொண்டர்களுக்கு வேற என்ன வேலை? அதான் அதேதான். ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்று, 'சின்னம்மா பிரதமர் ஆகவேண்டும்' என வலியுறுத்துவார்கள். இதற்காகத் தன் எம்.எல்.ஏ. பதவியையும் தாரைவார்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அறிக்கை விடுவார்கள். பிரதமர் ஆகுறதுக்கு எதுக்கு எம்.எல்.ஏ. பதவியைக் கொடுக்கணும்னுலாம் கேள்வி கேட்கக்கூடாது பாஸ். எல்லாம் அப்படித்தான்!

இதுவரை சினிமாவில் சின்னம்மா கேரக்டரில் வந்து கொடுமைப்படுத்திய நடிகைகளை எல்லாம் கூண்டோடு  கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டுவந்து, பாஸிட்டிவ் கேரக்டர்கள் கொடுத்து நடிக்க வைக்கப்படுவார்கள். சின்னம்மா பாத்திரத்துக்கு இருக்கிற களங்கமான இமேஜை மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெறும்..

தமிழ்நாட்டின் தலைநகரமான 'சென்னை' டம்மியாக்கப்பட்டு, கொஞ்ச நாளைக்கு 'மன்னை' என்கிற பெயர் தொடர்ந்து  ட்ரெண்டிங்கில் இருக்கும்.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் மாதிரி புதுசா ஆரம்பிக்கிற எல்லாத் திட்டமும் சின்னம்மா பெயரில் சீரும் சிறப்புமாகத் தொடங்கப்பட்டாலும், படலாம்ங்கிறது சொல்லி வேறயா தெரியணும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.