Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

இங்கிலாந்தின் பாதாள ரகசிய நகரம் பர்லிங்டன்!



ஒரு நகரத்தை திட்டமிட்டு உருவாக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், பூமிக்கடியில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது, வியப்பை ஏற்படுத்தும் அல்லவா?

அந்த பாதாள ரகசிய நகரம் இங்கிலாந்தின் பர்லிங்டன். 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது. அவசர காலங்களில் அரசு தலைமையகமாகவும் இந்த நகரம் செயல்பட்டது. வெடிகுண்டுகளால் பாதிக்கப்படாத அளவுக்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த இந்த நகரத்தைப் பற்றி, அந்நாட்டு குடிமக்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை.

பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் மருத்துவமனைகள், உணவகங்கள், அலுவலகங்கள், கிடங்குகள் என ஒரு நகரத்திற்குரிய அனைத்து வசதிகளும் இருந்தன. இவை தவிர குடிநீர் தேவைக்காக தற்காலிகமாக ஏரியும் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்ற பெருநகரங்களைப் போல் அல்லாமல் பூமிக்கடியில் இயங்கிய இந்த நகரில், காற்றின் ஈரப்பதம் குறையாதவாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

ஏறக்குறைய 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நகரம் அமெரிக்கா- சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன் 1991 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் இந்நகரத்தை மீண்டும் புதுப்பித்து செயல்பட்டு கொண்டுவரும் திட்டத்தை பிரிட்டன் கைவசம் வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.