Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

சுருளி அருவி மேம்படுத்த வேண்டும்... சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!


தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது, சுருளி அருவி. இது, கம்பம் நகரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 40 அடி உயரம் கொண்ட இந்த அருவியில், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம்வரை நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு உள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இங்கு உள்ளது. அங்கு, புண்ணியாதானம் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால், இதன் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.





இத்துணை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலத்தில் ஏராளமான குறைகளும் உண்டு. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள், ‘‘உணவு உண்ண இடங்கள், நிழற்குடைகள் இல்லை. குழந்தைகள் விளையாடப் பூங்கா இல்லை. மரத்தடியில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து இருக்கின்றன’’ என்றனர்.

இதுபற்றி அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டபோது, ``ஆள் பற்றாக்குறையினால் அசுத்தமாக உள்ளது. போதுமான அளவு பராமரிப்பது சிரமமாக உள்ளது. வரும் வருமானத்தில் நான்கு பங்கில் இரண்டு பங்கைத்தான் பராமரிக்கச் செலவிடுகிறார்கள். மற்ற அதிகாரிகளின் உள்ளீடு அதிகமாக இருக்கிறது. கான்ட்ராக்ட் எடுத்துச் செயல்படுவதால் போதிய சம்பளமும் கிடைப்பதில்லை. இதுகுறித்து நாங்கள் பலமுறை மேலிடத்தில் சொல்லியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர் வருத்தத்தோடு.





இதுகுறித்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ``இங்குள்ள அருவி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதில் குளித்து முடித்த பின்பு, நான் மீண்டும் பிறந்ததுபோல் உண்ர்கிறேன். ஆனால், இந்த இடம், என் பேரக்குழந்தைகள் காணும் காலம் வரை உயிர்ப்புடன் இருக்குமா என்று தெரியவில்லை.  இயற்கை அழகுமிகுந்த இந்த இடத்தைச் சேதமடையாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் தேவையும் சுருளியின் கனவும் நிறைவேறுமா என்பது நம் அரசிடம்தான் உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.