Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

ரயிலில் தனியே பயணிக்கும் பெண்களுக்கு 10 டிப்ஸ்கள்


1.நீங்கள் தனியாக ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டால், டிக்கெட் முன்பதிவின்போதே பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் டிக்கெட் புக் செய்யுங்கள்.

2. ஏற்கனவே எந்தத் திட்டமிடாமல் இல்லாமல் அவசரமாக பயணம் செய்யும்போது, முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்ய நேரிடும். அப்படிப்பட்ட சூழலில்கூட பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டியில் பயணம் செய்யலாம்.

3. படுக்கை வசதியுடன் டிக்கெட் முன்பதிவின்போது அப்பர் பெர்த் எனும் மேல்வரிசை படுக்கையினைத் தேர்வு செய்யலாம். இது தனியாக  செல்லும் ரயிலில் செல்லும்பெண்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும், பயணம் செய்ய உகந்ததாகும்.

4. நீங்கள் தனியாக பயணம் செய்யும் போது, உங்களுடன் பயணிப்பவர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். பேசியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களைப் பற்றிய எல்லா தகவலையும் அவர்களிடம் கூறாமல், ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லவும். உங்கள் தனிப்பட்ட விபரங்கள், முகவரிகள், தொடர்பு எண்கள் ஆகியவற்றை ஒருபோதும் எவரிடமும் பகிராதீர்கள்.

5. ரயில் பயணத்தின்போது செல்போனில் பேசநேர்ந்தால் மிக மெதுவாக அடுத்தவருக்கு கேட்காதவண்ணம் பேசவும். நீங்கள் சப்தமாக பேசினால் அதிலிருந்து அவர்கள் உங்களைப்பற்றி தகவல்களை தெரிந்து கொள்ளநேரிடும்.இவை தேவையில்லாத பிரச்சணைகளுக்கு ஆரம்பமாக அமையலாம்.

6. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அணுகி புகார் செய்யவும். மிகவும் அவசரம் என்றால் அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்துவிடவும்.

7. ரயிலில் பயணம் செய்ய தேவையான முகவரிச்சான்று இருக்கிறதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்வது அவசியம். அப்படி நீங்கள் மறந்து விட்ட சூழலிலும் டிக்கெட் பரிசோதகரிடம் தகவலைத் தெரிவித்து அதற்கான கட்டணத்தை கட்டவும். பதற்றத்தில் மற்றவர்களிடம் உதவியை நாடி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

8. நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களைப் பத்திரமாக கையாளுங்கள்.மற்றவர்காளின் முன்னிலையில் உங்கள் பைகளை திறந்து மூடுவதை தவிர்ப்பது நல்லது.

9.. கண்ணுக்கு உறுத்திடாத சாதாரண உடைகளை அணியுங்கள்.

10. அதிக ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வது, அணிந்து கொள்வதைத் தனியே பயணம் செய்யும் பெண்கள் தவிர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.