Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2017

திருமணத்திற்கு முன்பு மகளுக்கு தந்தை கட்டிக் கொடுக்கும் “காதல் குடிசை”



திருமணத்திற்கு முன்பு மகளுக்கு தந்தை கட்டிக் கொடுக்கும் “காதல் குடிசை”

கம்போடியாவில் பெண்கள் திருமணத்திற்கு முன்பு, அவர்கள் விரும்பிய ஆண் மகனுடன் வசிக்கலாம். இதற்காக தந்தைகளே தனியாக குடிசைகள் கட்டிக் கொடுக்கும் வினோத பழக்கம் இருந்து வருகிறது.

கல்யாணத்திற்கு முன்பு உறவு என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களால் தவறு என்று தான் கருதப்படுகிறது. ஆனால் கம்போடியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது.

இங்கு உறவு வைத்துக் கொண்ட பின்னர் தான், திருமணமே செய்கிறார்கள். அதுவும் 9 வயதிலேயே பெண்களுக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

குருயெங் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் தான் இந்த வினோதப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கு பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அல்லது 9 வயதிலேயே தனியாக குடிசை போட்டு கொடுத்து விடுகிறார் அப்பெண்ணின் தந்தை.

அதன் பிறகு அந்தக் குடிசைக்குள் தனக்கு பிடித்த ஆணுடன் அந்தச் சிறுமி வசிக்கலாம்.

அவளது மனதுக்குப் பிடித்த ஒருவனைக் கண்டறிந்த பின்னர், அதுகுறித்து குடும்பத்திடம் தெரிவித்தால் அவனையே அப்பெண்ணுக்கு கட்டி வைத்து விடுகிறார்கள்.

இதுகுறித்து குடிசையில் வசித்து வரும் 17 வயது நாங் சான் கூறுகையில், இது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமாக கருதுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை.

சுதந்திரமாக நாங்கள் எங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் உண்மையான காதலனை கண்டறியவும் இது உதவுகிறது.

இந்தப் பாரம்பரிய பழக்கத்தால் எங்களது பெண்கள் யாருமே தவறான வழிக்குப் போக வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தக் கிராமத்தில் விவாகரத்து, பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடுமை என எதுவுமே கிடையாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.