Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

ஜக்கு - மக்கு ஜோக்ஸ்!


மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?

மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

ஜக்கு: இது கூட தெரியலையா?

மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!

-------------------

மக்கு: இதான் என்னோட குழந்தை

ஜக்கு: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?

மக்கு: அதைத்தான் நானும் கேக்கறேன், ஆனா அது பேசறதே புரியமாட்டேங்குது.
---------------

கிரிக்கெட் போட்டியில் மக்கு!

நடுவர் மக்குவிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கொடுக்கிறார். மக்கு திட்டிக் கொண்டே வருகிறான்.

ஜக்கு: ஏன் திட்ற, பந்து பேட்ல பட்டுச்சா?

மக்கு: இல்லை!

ஜக்கு: பின்ன பந்து ஸ்டம்பை விட்டு வெளியே போற பந்தா?

மக்கு: இல்ல கால்ல பட்டு அவ்வளவு தூரம் போகுது அதுக்கு போய் எல்.பி. கொடுப்பானா?

ஜக்கு: ஏண்டா மக்கு காலைல ஏன் உங்க அப்பா உன்னைப் போட்டு அடிச்சாரு?

மக்கு: ஆமாம்! கோழிக்கு தண்ணி வச்சேன்!

ஜக்கு: அதுக்கு போயா அடிச்சாரு?

மக்கு: சுடுதண்ணி வைடா அப்பத்தான் கோழி முட்டை போடும்போது அவிச்ச முட்டையா போடும்னு எங்க தாத்தா சொன்னதைப் போய் நம்பித் தொலைச்சேன்.
----------------

மக்கு நாய் வாங்கச் செல்கிறான்...!

கடைக்காரர்: இந்த நாயோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட ஒரு காதை திருகினீங்கன்னா நீங்க சொல்றதக் கேக்கும் இன்னொரு காதைத் திருகினீங்கன்னா இப்ப டைம் என்னன்னு சொல்லும்.

மக்கு: 2 காதையும் திருகினா?

நாய்: கடிச்சுக் கொதறிப்புடுவேண்டா ராஸ்கல்!
---------------

மக்கு: என்னோட அதிர்ஷ்டமான நாள் 7ஆம் தேதி, பேங்க்ல போய் 7000 ரூபா எடுத்துகிட்டி ரேசுக்குப் போனேன். அங்கேயும் 7 குதிரைங்க.

ஜக்கு: ஜெயிச்சுதா?

மக்கு: 7வதா வந்துச்சு.
ஜக்கு: யாரோ ஒரு மாசமா தினம் காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிப்போயிடறாங்க! பெரிய தொல்லையாப் போச்சு.

மக்கு: நீ ஏன் காலிங் பெல்லை வெளில வச்ச?
-------------------

மக்கு: டிரெயின்ல கடைசி கோச்ல உக்காந்ததால டீ, காபி, டிபன் எதுவும் வர மாட்டேங்குது.

ஜக்கு: புகார் கொடுக்க வேண்டியதுதான?

மக்கு: கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்லை.

ஜக்கு: என்ன புகார் கொடுத்த?

மக்கு: கடைசி கோச்சை எடுத்து நடுவுல போடச்சொல்றேன்,ஒரு பய கேக்கமாட்டேன்கிறான்.
---------------

ஜக்கு: அக்கவுண்டண்ட் வேலைக்குப் போனியே என்ன ஆச்சு?

மக்கு: செலெக்ட் ஆகல! ஆனா வருஷத்துக்க்கு 84,000 சம்பளம்!

ஜக்கு: ஏன் நல்ல சம்பளம்தான!

மக்கு: நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 84,000ம்னா மாசத்துக்கு எவ்வளவுன்னு கேட்டேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.