Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

வேடிக்கை... விளையாட்டு... பொழுதுபோக்கு பூங்கா!


இன்றைய குழந்தைகளை திருப்திப்படுத்த பெற்றோர் படாதபாடு படவேண்டியுள்ளது. அதிலும், வேடிக்கை... விளையாட்டு பொழுது போக்குகள் கொண்ட இடங் களுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தும் குழந்தைகள் இன்று அதிகமாகி விட்டன. இவற்றிற்குள் நுழைய நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது! ஆனால், குழந்தைகள் திருப்தி தானே முக்கியம்.
இந்தியாவில் இன்று பெரிய நகரங் களில் இத்தகைய பொழுதுபோக்கு பூங்காக்கள் ஏற்கெனவே வந்துள்ளன. ஆனால், இவற்றில் இந்தியாவிலேயே சிறந்தவை எவை என அறிந்து, காசு போனாலும் போகுது என அதனுள் நுழைந்து பார்த்து வரும் திருப்தி இருக்கிறதே... அதன் சுகமே தனிதான்...! இந்த வகையில் கீழ்கண்ட ஆறு பூங்காக்கள் மிகச் சிறந்தவை.

ஈசல் வேர்ல்ட் அண்ட் வாட்டர் கிங்டம் - மும்பை
இது 1986ல் திறக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழைய பொழுது போக்கு பூங்கா இதுதான். வாட்டர் கிங்டமுடன் இணைந்து உருவாக்கப் பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரியது. இந்த பூங்காவிற்கு வருடா வருடம் 2 மில்லியன் பேர் வருகை தருகின்றனர். இதனுள் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் வசதியும் உள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 1000 ரூபாய், சிறுவர்களுக்கு 790 ரூபாய், முதியவர்களுக்கு 390 ரூபாய்!

ஒண்டர்லா - பெங்களூரு!
பெங்களூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஜாலி ரைடுகள் உள்ளன. இதில் கிட்ஸ் ரைட்ஸ்; வாட்டர் ரைட்ஸ், ட்ரை ரைட்ஸ் மற்றும் ஹை த்ரில் ரைட்ஸ் உட்பட பல ரைட்ஸ்கள் உள்ளன.
லேசர் வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் சிஸ்டம் மூலம் பெய்விக்கப்படும் மழையில் நின்று, மழை டிஸ்கோ நடனம் ஆடலாம். இங்கு தங்கி, ரசித்துச் செல்ல ஏதுவாய் தங்குமிடங்கள் உண்டு.
நிறுவன கான்பரன்ஸ்கள் நடத்த ஏதுவாய் 1000 பேர் அமரும் பெரிய ஹால் உள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 770 ரூபாய், குழந்தைகளுக்கு 620 ரூபாய்.
வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு 940 ரூபாய், குழந்தைகளுக்கு 710 ரூபாய்...

எம்.ஜி.எம்.டிசி வேர்ல்ட் - சென்னை
கோடை காலத்தில் சென்னை மக்கள் பொழுது போக்க சிறந்த இடம்! நீச்சல் குளங்கள், உலர்ந்த மற்றும் தண்ணீரில் சவாரி... குழந்தைகளுக்கு "எம்.ஜி.எம்., மினி வீடு' என்ற பெயரில் தனி வசதி. இங்கும் மழையில் டிஸ்கோ நடனம் ஆடலாம்! செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்யலாம்! சிறுவர்களுக்கு போரடிக்காமல் இருக்க வீடியோ கேம்ஸ் பிரிவும் உண்டு.
கட்டணம்: மெகா: பெரியவர்களுக்கு 799 ரூபாய்; குழந்தைகளுக்கு 577 ரூபாய்.
ஜம்போ: பெரியவர்களுக்கு 550 ரூபாய்; குழந்தைகளுக்கு 450 ரூபாய்.

பன் என் புட் கிராமம் - குர்காவுன்!
டெல்லியில் மிகப் பழைய மற்றும் நன்கு தெரிந்த பொழுது போக்கு பூங்கா! இதில் 21 விதமான சவாரிகள் உண்டு. இங்கும் மழையில் டிஸ்கோ டான்ஸ்... தண்ணீரில் சறுக்கி இறங்குதல், தண்ணீரில் விளை யாட்டு பகுதி, நீச்சல் குளங்கள், டிபன் கடைகள், உணவகங்கள் என எல்லாம் உண்டு!
கட்டணம்: திங்கள் முதல் சனி வரை: தம்பதிக்கு 1700 ரூபாய். குழந்தைகளுக்கு 600 ரூபாய்...
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 100 ரூபாய் கூடுதல். பெரியவர்கள் தனியாய் வந்தால் 1100 ரூபாய்!

வேர்ல்ட்ஸ் ஆப் ஒன்டர்ஸ்!
நொய்டாவில் உள்ள க்ரேட் இந்தியா ப்ளேஸ் மால் அருகில் உள்ளது. மாதத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விஜயம் செய்கின்றனர். முக்கியமான காரணம்... வெயிலிலிருந்து தப்ப!
நொய்டாவில் உள்ள, "நேஷனல் கேபிடல் ரீஜன்' அருகே அமைந்துள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 879 ரூபாய். குழந்தைகளுக்கு 699 ரூபாய். முதியவர்களுக்கு 499 ரூபாய்!

நிக்கோ பார்க் - கொல்கத்தா
எஸ்.ஏ.8000 சான்றிதழ் பெற்ற உலகின் முதல் பொழுதுபோக்கு பூங்கா. இதற்கு ஐ.எஸ்.ஓ. 14001 சான்றிதழும் கிடைத்துள்ள முதல் இந்திய பொழுது போக்கு பூங்கா இதுதான்... தரத்திற்கான ஐ.எஸ்.ஓ.9001ம் சான்றிதழும் பெற்றுள்ளது.
கட்டணம்: ஒரு நபருக்கு 500 ரூபாய்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.