Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2017

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு


*பெண்கள் எல்லோரும் அழகு மட்டும் போதாது அதற்கேற்றவாறு உடல் எடையும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
ஓல்லியாக இருப்பவரையும் குண்டாக இருப்பவரையும் யாரும் அழகு என்று குறிப்பிடமாட்டார்கள்.எல்லா பெண்களும் உடலுக்கேற்ற அளவு எடை வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

*பெண்கள் ஒவ்வொரு வயதையும் எட்டும் போதும் அவர்களின் வயதுகேற்ப உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.நீங்களும் அழகான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா? பொறுமையாக படியுங்கள், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அழகுக்கும் இளமைக்கும் உதவும் என்கிறது ஆய்வுகள்.

*இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.

*வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் சாப்பாடு வகைகள்

*டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1.பச்சை இலை காய்கறிகள்.
2.வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
3.கிழங்குகள் - தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.
4.குருப் -1 காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
5.குருப் - 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

*10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளைம் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குருப் - 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரைம், கு 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரைம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*காய்கறிகளை போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றைம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

*இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.