Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

மாரடைப்பால் மரணம் வியாபாரியின் உடலை வாங்க 2 மனைவிகள் போட்டி


மாரடைப்பால் இறந்த வியாபாரியின் உடலை வாங்க அவரது 2 மனைவிகள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரி
சென்னை திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 45). அந்த பகுதியில் மளிகை கடை வைத்து இருந்தார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
அனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கோவிந்தராஜ் அம்மு என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 10 வருடங்களாக 2–வது மனைவி அம்முவுடன் கோவிந்தராஜ் வசித்துவந்தார்.
2 மனைவிகள் போட்டி
கோவிந்தராஜுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வழியிலேயே கோவிந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த 2 மனைவிகளும் கோவிந்தராஜ் உடலை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு விரைந்துவந்த போலீசார், போட்டி போட்ட 2 பெண்களையும் சமரசம் செய்துவைத்தனர். பின்னர் கோவிந்தராஜ் உடலை முதல் மனைவி சம்மதத்துடன் 2–வது மனைவி அம்முவிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்
சென்னை வண்ணாரப்பேட்டை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி(55). இவருக்கு கவுசல்யா, மஞ்சுளா, அனிதா, கல்பனா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த சாந்தி நேற்று காலை இறந்துவிட்டார்.
அவரது உடலை அவரது மகள்களான கவுசல்யா, மஞ்சுளா, கல்பனா ஆகிய 3 பேரும் தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். நாங்கள் ஓட்டேரியில் வைத்து நல்லடக்கம் செய்கிறோம் என்றனர். சாந்தியின் மற்றொரு மகள் அனிதாவும், தாய் கன்னியம்மாளும் வண்ணாரப்பேட்டையில் தான் சாந்தியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றனர்.
தாயாரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து தனது தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வண்ணாரப்பேட்டை போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சாந்தியின் உடல் அவரது தாயார் கன்னியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.