Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

டெல்லி லோக் நாயக் பவனில் பயங்கர தீ விபத்து - தீயை அணைக்க தீவிரம் !


டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைத்துள்ள லோக் நாயக் பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவன் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மின்கசிவினால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று மாலையில் ஏசி இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதில் கரும்புகை வெளியானது. சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.