Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை விதித்த ஹைகோர்ட்: நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் மசூர் பருப்பு !


அரசின் பொதுவிநியோகத்தில் மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதிஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2006ல் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை மற்றும் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அளித்த அறிக்கையிலும் மசூர் பருப்பால் ஏராளமான நோய்கள் வருவதாகக் கூறியுள்ளதை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை ஏற்று மசூர் பருப்பு கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஜுன் மாத்தில் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்காக டெண்டர் கோரப்பட்டள்ளது. இதனால் இவற்றை கொள்முதல் செய்யும் டெண்டருக்குத் தடை கோரியும், அரசின் ஆணையை ரத்து செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இது குறித்து தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், உணவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.