Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2017

சசி ஷாப்பிங் செல்ல உடந்தையாக இருந்த அதிகாரிக்கு சிறை தலைமை புரமோஷன் கொடுத்த கர்நாடக அரசு!


சசிகலா ஷாப்பிங் செல்ல உடந்தையாக இருந்த பெண் அதிகாரிக்கு புரமோஷன் கொடுத்துள்ளது கர்நாடக அரசு.

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் தலைமை கண்காணிப்பாளராக பதவி வகித்த கிருஷ்ணகுமார் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு புதிதாக எந்த பதவியும் ஒதுக்கப்படவில்லை.

சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா கொடுத்த குற்றச்சாட்டு அறிக்கை லீக்கானதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

ஆனால் உண்மையில், சசிகலாவின் விதிமீறலுக்கு அதிக உடந்தையாக இருந்தது அச்சிறையில் கிருஷ்ணகுமாருக்கு அடுத்த நிலையில் இருந்த, அதாவது கண்காணிப்பாளராக இருந்த அனிதாதானாம்.

சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபாவை பணியிடமாற்றம் செய்த கர்நாடக அரசு, முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அனிதாவுக்கு அதே சிறையில் பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது.

பிரஜா டிவி என்ற கன்னட செய்தி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஷாப்பிங் சென்று திரும்பும் காட்சியுள்ளது. அவர்களோடு சேர்ந்து நடந்து வருவது அப்போது கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த அனிதா என்று டிவி செய்தியில் கூறப்படுகிறது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட அனிதாவுக்குதான், தெரிந்தோ, தெரியாமலோ பதவி உயர்வு வழங்கியுள்ளது கர்நாடக அரசு. கிருஷ்ணகுமார் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு அனிதா நியமிக்கப்பட்ட நிலையில், நேற்றே சிறைக்குள் கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அனிதாவும் குற்றங்களுக்கு உடந்தையானவர், ஊழல் பேர்வழி என கைதிகள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.