July 24, 2017
இந்தியாவிடம் சீனா கொக்கரிப்பு: மலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம் !
எங்களது ராணுவத்தை அசைத்து பார்ப்பது என்பது இந்தியாவால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம் என சீனா கொக்கரித்துள்ளது. மேலும் தற்போது பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று மீண்டும் கூறியுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் யு கியான் , இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா தனது பலம் குறித்து பொய்யான நினைப்பில் மிதப்பதாக அவர் எள்ளி நகையாடியுள்ளார். சீனாவின் பலம் தெரியாமல் இந்தியா படைகளை குவித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் துருப்புகளை வாபஸ் பெற்றால் அது இந்தியாவிற்கு நல்லது என குறிப்பிட்டுள்ளார்.
90 ஆண்டுகள் பழமையான எங்களது ராணுவத்தால் சீனாவின் எல்லைகளை காப்பாற்றுவது எளிதான காரியம் தான். ஒரு மலையை கூட அசைத்து விடலாம். ஆனால் எங்கள் ராணுவத்தை அசைத்து பார்க்க யாராலும் முடியாது என கொக்கரித்தார். சிக்கிம் - பூடான் மற்றும் திபெத் எல்லைகள் சந்திக்கும் முச்சந்தியில் இருக்கும் டோக்லாமிற்கு சீனா உரிமை கோருகிறது. ஆனால் அப்பகுதி தனக்கு சொந்தமானது என்பதால் சீனாவின் சாலை அமைக்கும் பணியை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து எல்லை பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளன.
பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால், இந்தியா முதலில் தனது படைகளை விலக்கி கொள்ள வேண்டும் என்பது சீனாவின் நிபந்தனையாகும்.
இந்தியாவிடம் சீனா கொக்கரிப்பு: மலையை அசைப்பது ஈஸி.. எங்களிடம் மோதுவது கஷ்டம் !
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.