July 9, 2017
கண்டுகொள்ளாத காவல்துறை: இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அட்டகாசம் !
கோவையில் இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதை காவல்துறையினர் கண்டுகொள்ளலாம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சனியன்று நோயாளி ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்திடவே அவரது உறவினர்கள் உடலை எடுத்துச்செல்ல இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ்சை அணுகியுள்ளனர்.
அப்போது அவர்கள் அதிக தொகையை வாடகையாக கேட்டுள்ளனர். இதனால் நோயளியின் உறவினர்கள் சுடர் என்ற தனியார் ஆம்புலன்ஸ்சை தொடர்பு கொண்டுள்ளார். வாடகை குறைவாக இருந்ததால் இறந்தவரின் உறவினர்கள் சுடர் ஆம்புலன்ஸ்சை அழைத்துள்ளனர். இதன்பின்னர் அழைப்பை எற்று வந்த சுடர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அன்பு என்பவரை வழிமறித்த இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மணி, கண்ணன் மற்றும் சவுந்தர் ஆகியோர் சம்பந்த பட்ட நபரை தாங்கள் தான் காலையில் மருத்துவமனைக்கு அழைத்துவந்ததாகவும் எனவே இப்போதும் தாங்கள் தான் இறந்தவரின் உடலை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கூறி அன்புவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மணி மற்றும் சவுந்தர் ஆகியோர் அன்புவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அன்புவின் மார்பு மற்றும் கைகளில் பிளேட்டை கொண்டு இந்து மக்கள் கட்சியின் ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் கிழித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பந்தமாக பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வியாபாரிகள் கூறியதாவது: இந்து மக்கள் கட்சியின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடந்த 2014ம் ஆண்டு பூபதி என்பவரை தாக்கியதோடு அவரது இரண்டு கைகளை உடைத்தனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் சம்பந்த பட்ட பூபதியை மிரட்டி அனுப்பினர். இதேபோல் கோவை ஆம்புலன்ஸ் சர்வீஸ் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களையும் இவர்கள் தாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கோவை அரசு மருத்துவமனையில் கட்சியின் பெயரை கூறிக்கொண்டு தாக்குதல் நடத்துவது வழக்கமாகியுள்ளது, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மீறி வியாபாரிகள் எதேனும் கேட்டாள் மிரட்டல் விடுவதாகவும் இதனால் பயத்தில் யாரும் இவர்களை கேட்க முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.
கண்டுகொள்ளாத காவல்துறை: இந்து மக்கள் கட்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அட்டகாசம் !
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.