டார்ஜிலிங்கில் மீண்டும் வெடித்தது கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை போராட்டம். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடிக்கிறது.
இப்போராட்டத்தைத் தொடர்ந்து அஸ்ஸாமில் போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடப் போவதாக அந்த இயக்கத்தினர் அறிவித்தனர், தற்போது திரிபுராவிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தின் மக்கள் தொகையில் கணிசமாக உள்ள பழங்குடி மக்கள் நீண்டகாலமாக திப்ரலாண்ட் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால்தான் திரிபுரா பழங்குடி மக்கள் மாவட்ட தன்னாட்சி கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது.
தற்போது கூர்க்காலாந்து போராட்டம் வெடித்த நிலையில் எங்களுக்கும் திப்ரலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் களமிறங்கியுள்ளனர் திரிபுரா பழங்குடி மக்கள். இம்மாநிலத்தின் பிரதான நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைகளை காலவரையின்றி முடக்கப் போவதாகவும் போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தை ஆளும் இடதுசாரி அரசும் ஆதரிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசும் எதிர்ப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.