Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

நடராஜன் மீது ஆத்திரத்தில் சசிகலா: ஜெ.வுக்கு விஷ ஊசி போட்டோம்?


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாகவும் அதன் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவின் ஓபிஎஸ் அணியின் பிரதான கோரிக்கையே அது தான்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவே பலரும் சந்தேகங்களை தெரிவிக்கின்றனர். இதனால் சசிகலா தான் ஜெயலலிதாவை கொன்றார் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உருவாகி வந்தது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் அமைதியானது. இதனால் சசிகலா மீதான ஜெயலலிதா மரணம் தொடர்பான பிம்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் பழைய விஷயங்களை கிளறும் விதமாக ஊடகங்களில் பேசியது சசிகலாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊடகத்தில் பேசிய நடராஜன், நாங்கள் ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷ ஊசி போட்டோம் என்று முன்பு சொன்னார்கள். அதெல்லாம் பொய் என ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் நிரூபித்தன என்றார்.

நடராஜ் தேவையில்லாமல் விஷ ஊசி குற்றச்சாட்டுகளை பற்றி பேசி அதனை நினைவுப்படுத்துவதால் சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நடராஜன் மீது கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.