July 13, 2017
சென்சார்போர்டு கட்டளை: இந்துத்துவா என பேசக்கூடாது ?
பொருளாதார வல்லுநரான அமர்த்தியா சென் குறித்து தி ஆர்கியூமென்டேடிவ் இந்தியன் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமர்த்தியாசென்னின் குறித்த இந்த படத்தை சுமன் கோஷ் இயக்கி உள்ளார்.
அமர்த்தியா சென்னின் மாணவர் மற்றும் பொருளாதாரப் பேராசிரியர் கெளசிக் பாசு ஆகியோரின் கலந்துரையாடலை மையமாக வைத்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்வா பார்வையில் இந்தியா போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்திலிருந்து பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்வா பார்வையில் இந்தியா போன்ற வசனங்களை மியூட் செய்தால்தான் யுஏ சான்றிதழ் வழங்க முடியும் என்று சென்சார் போர்டு கூறி உள்ளது. இதனிடையே, படத்திலிருந்து அந்த வசனங்களை மியூட் செய்யவோ அல்லது நீக்கவோ முடியாது என்று படத்தின் இயக்குநர் சுமன் கூறியுள்ளார். இதனால், படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்சார்போர்டு கட்டளை: இந்துத்துவா என பேசக்கூடாது ?
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.