July 13, 2017
குஜராத்தில் பரபரப்பு: தலித் பெண்களை கோவிலுக்குள் விட மறுத்த பூசாரிகள் !
குஜராத்தில் தலித் பெண்களை பூசாரிகள் கோவிலுக்குள் விட மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா அருகே உள்ள மெஹ்லால் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் 9 பேர் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது சாதி பெயரை கூறி தரக்குறைவாக பேசிய 3 பூசாரிகள் 9 பேரையும் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்னொரு இளம் பெண் தனியாக கோவிலுக்கு சென்றபோது அந்த பெண்ணையும் சாதியை காரணம் காட்டி பூசாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே இது தொடர்பாக தலித் அமைப்பு ஒன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது. ஆனால் இந்த புகார் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாகவும், புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் அடிக்கடி கொலை சம்பவம் நடைபெறும் வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத்தில் பரபரப்பு: தலித் பெண்களை கோவிலுக்குள் விட மறுத்த பூசாரிகள் !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.