பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து சிறைத்துறை டிஐஜி ரூபாவிற்கு சில தகவல்களை கூறிய ஒரு கைதியை சிறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.
அதன் பின் அவர் மீண்டும் நேற்று சிறைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சில அதிகாரிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவருக்கு எதிராக சில கைதிகள் கோஷம் எழுப்பினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சிறையில் தான் எடுத்த வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சிறையில் ரூபா சோதனை செய்த போது, ராமமூர்த்தி என்ற கைதி, சிறையில் உள்ள விதிமுறை மீறல்கள் பற்றி தகவல் கொடுத்துள்ளார். எனவே அவரை சிறை சுப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆபாசமாக திட்டியதோடு, அவரை அடித்து உதைத்தாக தெரிகிறது. இதையடுத்து, கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ராமமூர்த்தியின் மனைவி அனிதா என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.