July 19, 2017
ஜெ. சமாதிக்குப் போன எடப்பாடியார்: எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை ஏற்றிய கையோடு ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. கடந்த 45 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. சபாநாயகர் தனபால் சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாட பழனிச்சாமி ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம் என்றார்.
மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது அதிமுக எம்.எல்.ஏ.வின் சொந்த கருத்து என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெ. சமாதிக்குப் போன எடப்பாடியார்: எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை ஏற்றிய கையோடு ?
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.