கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய்களில் கசிவு ஏற்படுவதாக கூறி எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலம் கிராம மக்கள் கடந்த 3 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்குழுவினர் சார்பில் வழக்கறிஞர் நல்லதுரை தாக்கல் செய்த ஜாமீன் மனு, தஞ்சை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தாா். இதை எதிர்த்து நாளை மேல் முறையீடு செய்யப்படும் என்று வழக்கறிஞர் நலத்துரை தெரிவித்தார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.