Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை: பியூஷ் கோயல் திட்டவட்டம்


அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்க முடியாது என்று மத்திய மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கூடங்குளம் 3, 4 உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் என்.எல்.சி.க்கு ரூ.508 கோடி செலவு குறைந்துள்ளது. அதாவது, நிலக்கரி கொள்முதல் விலை குறைந்துள்ளது. உதய் மின்திட்டம் மூலம் தமிழ்நாட்டுக்கு நிதி மிச்சமாகும். தமிழகத்தில் மின்சாரத் துறை வளர்ச்சி அடையும். எண்ணூர் துறைமுகம் தனியார் மயமாக்கப்படாது.

செய்யூர் நிலக்கரி மின் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அதே சமயம் அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை. தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.