Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2017

பொது இடத்தில் தண்ணி அடிக்காதீங்க: தட்டிக் கேட்ட தொழிலதிபர் கொடூர கொலை...!


பொது இடத்தில் தண்ணி அடிக்க வேண்டாம் என்று வலியுறுத்திய தொழிலதிபர் கொலை செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த ஜீவா(39), தனது உறவினர் ஷங்கர்(35) உடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வண்டலூர் அடுத்த கோலப்பாக்கம் பகுதியில் சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, பொது இடத்தில் ஏன் மது அருந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி ஜீவா கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ஷங்கரையும், ஜீவாவையும் தாக்கினர். இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷங்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள், இளைஞர்கள் கொடூர ஆயுதங்கள் வைத்திருந்ததால் அருகில் செல்லவில்லை. சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வருவதற்குள் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்த விசாரணையில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். விசாரணையை தொடர, ஜெனரல் வார்டிற்கு ஷங்கர் மாற்றப்படுவதற்காக போலீசார் காத்துக் கொண்டிருக்கின்றனர். உயிரிழந்த ஜீவாவிற்கு தேவி(32) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.