Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2017

செங்கோட்டையன் : ஆசிரியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம் !


அரசுப் பள்ளி ஆசிரியர் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையில் அதிரடியான பல மாற்றங்கள் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாதிரியான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்கிற அறிவிப்பு வரும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

கல்வியாளர்கள் இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக அரசிடம் கோரி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்த மாட்டோம்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் பல மாற்றங்கள் ஏற்படும்போது ஆசிரியர்கள் தானே அரசுப் பள்ளிகளை நாடுவார்கள்' என கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்துக் கூறும்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.