July 19, 2017
கணவருடன் கருத்து வேறுபாடு: பிரபல நடிகை தற்கொலை !
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதிஷா பெஸ்பருவா(30). மாடல் அழகியாக இருந்த அவர், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். திரைத்துறையில் பாடகியாகவும் வலம் வந்தார். சமீபத்தில் வெளியான பாலிவுட் ‘ஜக்கா ஜசூஸ்’ படத்திலும் அவர் நடித்துள்ளார்.
கடந்த வருடம் இவர் குஜராத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரோடு அவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. மேலும், கணவரின் பெற்றோர்கள் தன்னை கொடுமைபடுத்துவதாக, அவரின் தந்தையிடம் அவர் கூறிவந்தார். மேலும், விரைவில் அவரை விவாகரத்து செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, அவரின் தந்தை அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாழ்போள் போடப்பட்டிருந்தது. எனவே, கதவை உடைத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிதிஷா தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
கணவருடன் கருத்து வேறுபாடு: பிரபல நடிகை தற்கொலை !
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.