Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

காவ்யா மாதவனிடம் போலீசார் தீவிர விசாரணை: பாவனா கடத்தல் வழக்கு !


நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் 3 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகை பாவனா கடத்தலில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் 2 ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளனவாம். இதைத் தெரிந்து கொண்ட காவ்யா, திலீப் கைதுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தனது தாயாருடன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். அவர்கள் இருவரையும் போலீசார் ரகசியமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் கைது செய்ய நேரிடும் என போலீசார் தகவல் அனுப்பினர். அதன்படி காவ்யா மாதவன், தனது தாயார் சியாமளாவுடன் போலீசார் கூறிய ரகசிய இடத்திற்கு சென்றார். தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். டிஜிபி லோக்நாத் பெகராவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் சில முக்கிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.

பாவனாவைக் கடத்திய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிதான் காவ்யா மாதவனுக்கு எதிரான ஆதாரங்களை போலீசாருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யா மாதவன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.