Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

8 பேர் பலி; 25 பேர் படுகாயம்: தஞ்சையில் அரசு பேருந்து - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து !


வல்லம் அருகே அரசுப் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த மினி லாரியும் வல்லம் அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் மினிலாரி ஓட்டுநர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும் காயமடைந்த 25 பயணிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.