Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தற்கொலை முயற்சி ! - வீடியோ


பட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன். இவர் தான் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அவருக்கு வீட்டு மனை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிருப்தி அடைந்த சரவணன் மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் என 13 ஆட்சியர் அலுவலம் முன்பு, கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தங்கள் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர்.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல் துறையினர் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றினர் .பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தனது வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் இவ்வாறு செய்ததாக கூறினர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.