Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டார் நீதிபதி கர்ணன்!


கோவையில் கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தார் நீதிபதி கர்ணன். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் கர்ணன். இந்நிலையில், அவர் இன்று கோவையில் கைது செய்யப்பட்டார்.




நீதிபதி கர்ணனை கைது செய்த கொல்கத்தா காவல்துறையினர், அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். இன்று இரவு முழுவதும் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்க வைக்கப்படுகிறார் கர்ணன். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து, அவரை கொல்கத்தாவிற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.