Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

மாப்பிள்ளை இவர்தான், ஆனால் இவரின் சட்டை என்னுடையது - படத்தின் காமெடியைச் சொல்லி மு.க.ஸ்டாலின் கலாய்ப்பு



அ.தி.மு.க எம்எல்ஏ சரவணன் குதிரை பேரம்குறித்துப் பேசும் வீடியோ விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோகுறித்து மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். மேலும், இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால், தி,மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைதுசெய்து அழைத்துச்சென்றது.




இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், 'கூவத்தூர் விடுதியில் நடைபெற்றுள்ள குதிரை பேரம், தமிழக அரசுக்கு அவமானம். "அந்த வீடியோவில் உள்ளது நான்தான். ஆனால் பேசியது நான் இல்லை" என்று எம்எல்ஏ சரவணன் கூறியிருக்கும் விளக்கம் "இவர்தான் மாப்பிளை. ஆனால். இவர் அணிந்திருக்கும் சட்டை அவருடையது கிடையாது" என்னும் திரைப்பட காமெடி காட்சியை நினைவுப்படுத்துகிறது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.