சென்னை: கணவர் மாதவனை விட அதிகம் உரிமை எடுத்துக் கொண்டு பேசுபவர் தீபாவின் டிரைவர் ராஜா, பொது இடம் என்றும் பார்க்காமல் வா... போ... என்று ஒருமையில் பேசியது, தீபாவின் தற்கொலைப்படை நிர்வாகியின் கோபத்தை அதிகரித்து விட்டது. அதே கோபத்தோடு டிரைவர் ராஜாவை மிரட்டியுள்ளார்.
சிவகாசியை சேர்ந்த செங்கோல்ராஜ் என்பவர்தான் தீபாவின் ஆதரவாளர். அவர், விடுத்துள்ள மிரட்டல் ஆடியோவில், தீபா அம்மாவின் தற்கொலை படையாக நான் விளங்கி வருகிறேன். டிரைவர் ராஜாவே உங்க நாக்கை அடக்கி கொள்ளுங்கள். இல்லையெனில் சுவைப்பதற்கு நாக்கு இருக்காது. அறுத்து எறிந்திடுவோம்.
என்ன பேச வேண்டும் என்று பார்த்து பேச வேண்டும். தமிழகத்தின் முதல்வராக வரப் போகிற இளைய புரட்சி தலைவியை பார்த்து நீ வாரயா என்று கேட்கிறாய்.
மீண்டும் எச்சரிக்கிறேன். நாக்கை அடக்கிக்கொள். இல்லையென்றால் அறுத்து எறிந்துவிடுவோம் என்று கொடூரமாக மிரட்டியுள்ளார் தீபாவின் ஆதரவாளர்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற தீபா உடன் டிரைவர் ராஜா, காரில் ஏறச் சொல்லி கட்டளையிடும் தொணியில் பேசினார். நீ ஏறு... இங்கே வரவேண்டாம்னு சொன்னேனே என்று சொன்னார். தீபாவின் கணவர் மாதவனையும் அசிங்கப்படுத்தி பேசினார். இதனால்தான் வெகுண்ட தீபாவின் ஆதரவாளர், நாக்கை வெட்டி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.