June 20, 2017
ஓடும் காரில் பலாத்காரம்செய்து சாலையில் வீசப்பட்ட பெண்! டெல்லியில் தொடரும் அவலம்
டெல்லியில் மர்ம கும்பல் ஒன்று, பெண்ணை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம்செய்து, சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், சில வாரங்களுக்கு முன்னர்தான் டெல்லி சென்றுள்ளார். நேற்றிரவு மூன்று பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணைக் கடத்திச்சென்று, காரில் வைத்தே பாலியல் பலாத்காரம்செய்து, சாலையில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் கூறுகையில், நேற்றிரவு சுமார் எட்டு மணிக்கு குர்கான் பகுதியில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், பின்னர் ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்செய்து சாலையில் வீசிவிட்டதாகவும் கூறினார்.
சாலையில் நடந்துசென்ற ஒருவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தலைநகரில் அரங்கேறியுள்ள இந்தக் கோர சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் காரில் பலாத்காரம்செய்து சாலையில் வீசப்பட்ட பெண்! டெல்லியில் தொடரும் அவலம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.